Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
Monday, 16 April 2018 - 16:53
பிணையில் விடுவிக்கப்பட்ட மகிந்தானந்த மீண்டும் கைது
12,642

Views
பிணை வழங்கப்பட்ட முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே, பிணை நிபந்தனையை நிறைவேற்றத் தவறியதால், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

2014ம் ஆண்டு கெரம் பலகை இறக்குமதி ஊடாக 39 மில்லியன் ரூபாய் அரசாங்க நிதியில் மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அவர், இன்று நிதிமோசடி விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னிலையானார்.

இதன்போது, கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்தானந்த அளுத்கமகே, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

35 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், 5 லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளிலும் அவர் விடுவிக்கப்பட்டார்.

அத்துடன் வெளிநாடு செல்லவும் தடைவிதிக்கப்பட்டது.

பிணைக்கான ஆவணத்தில் கைச்சாத்திடும் போது, வெளிநாட்டு கடவுச் சீட்டை சமர்ப்பிக்க அவர் தவறியுள்ளார்.

எனினும் வேறொரு வழக்கில் தமது கடவுச் சீட்டு நீதிமன்றத்தினால் பெற்றுக் கொள்ளப்பட்டமையை நாடாளுமன்ற உறுப்பினர் அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் அதற்கான அத்தாட்சியை வழங்க தவறிய நிலையில், அவர் விளக்கமறியலுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
395 Views
HiruNews
HiruNews
HiruNews
6,461 Views
HiruNews
HiruNews
HiruNews
5,306 Views
HiruNews
HiruNews
HiruNews
10,483 Views
HiruNews
HiruNews
HiruNews
35 Views
HiruNews
HiruNews
HiruNews
38,598 Views
Top