Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF+
Tuesday, 17 April 2018 - 10:12
மாணவிகளுக்கு பாலியல் வலை விரித்த பேராசிரியைக்கு நேர்ந்த கதி
3,325

Views
தமிழகத்தில் கல்லூரி மாணவிகளிடம் கையடக்க தொலை பேசி ஊடாக பாலியல் தொழிலுக்கு வலைவிரித்த கல்லூரிப் பேராசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர் தேவாங்கர் கல்லூரியின் கணிதப் பிரிவு உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகளிடம் கடந்த மார்ச் மாதம் 13 ஆம் திகதி கையடக்க தொலைபேசி ஊடாக பாலியல் தொழிலுக்கு அழைக்கும் குரல் பதிவு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

இதையடுத்து மாணவிகள் கொடுத்த முறைப்பாட்டுக்கு அமைய பேராசிரியை கடந்த மார்ச் மாதம் 19 ஆம் திகதி பணியில் இடைநிறுத்தப்பட்டார்.

பேராசிரியை பேசும் குரல் பதிவில், 5 மாணவிகளைத் தேர்வு செய்து அவர்களிடம் தொலைபேசியில் உரையாடும் பேராசிரியை ஐந்து பேருக்கும் ஆசை வார்த்தை கூறி, 'மதிப்பெண் மற்றும் பெரிய அளவில் பணம் கிடைக்கும். சில பெரிய மனிதர்களுக்கு நீங்கள் தேவை. மிகுந்த பிரயாசைக்குப் பின்னர் உங்களை அணுகியுள்ளேன். இதனால் உங்கள் வாழ்க்கையே மாறும்' என்று ஆசை காட்டிப் பேசுகிறார்.

ஆளுநர் மாளிகை வரை எனக்கு செல்வாக்கு உள்ளது, மேலும் இதில் காமராஜர் பல்கலைக்கழகத்தில் சிலரும் உள்ளனர் என்றெல்லாம் பேசி, மிகப்பெரிய விஐபிக்கு தேவை. அவர் பெயரைச்சொன்னாலே நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள்" என்கிறார்.

இந்த குரல் பதிவு மூன்று நாட்களுக்கு முன் வெளியே வந்தது. இது நாடெங்கும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.

நிர்மலா தேவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும், கைது செய்ய வேண்டும். பின்னால் உள்ள பெரிய மனிதர்கள் யார் என்று விசாரணை நடத்தி அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள், மாதர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் பேராசிரியை நிர்மலா தேவி மீது தேவாங்கர் கல்லூரி நிர்வாகம், காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளது.

இதையடுத்து அருப்புக்கோட்டை காவல்துறையினர், பேராசிரியை நிர்மலா தேவி மீது, குற்றம் செய்ய வற்புறுத்தல், ஆபாசமாகப் பேசுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், பேராசிரியை நிர்மலா தேவியைக் கைது செய்ய அவரது வீட்டுக்குச் சென்றனர்.

காவல்துறையினர் வரும் தகவலை அறிந்த நிர்மலா தேவி, வீட்டைப் பூட்டிக்கொண்டு உள்ளே பதுங்கிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினர் கதவைத் தட்டியும் திறக்கவில்லை. அக்கம் பக்கத்தாரிடம் கேட்டபோது அவர் வீட்டில் தான் இருக்கிறார் என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட காவல்துறையினர், அவர் வீட்டைச் சுற்றி வளைத்தனர். ஆனாலும் நிர்மலா தேவி வெளியே வராததால் அருப்புக்கோட்டை வட்டாட்சியரிடம் காவல்துறையினர் முறையிட்டதன் பேரில் வட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு வந்தார்.

அவர் முன்னிலையில் வீட்டின் பூட்டை உடைக்க முடிவெடுக்கப்பட்டது.

நிர்மலா தேவியின் உறவினர் வந்தபின்னர் அவர் முன்னிலையில் பூட்டு உடைக்க காவல்துறையினர் முடிவெடுத்தனர். பின்னர் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.

பின்னர் பேராசிரியை நிர்மலா தேவியின் கணவர் மற்றும் உறவினரை விசாரித்த காவல்துறையினர், நேற்று மாலை 6.55 மணி அளவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து நிர்மலா தேவியைக் கைது செய்துள்ளனர்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
395 Views
HiruNews
HiruNews
HiruNews
6,461 Views
HiruNews
HiruNews
HiruNews
5,306 Views
HiruNews
HiruNews
HiruNews
10,483 Views
HiruNews
HiruNews
HiruNews
35 Views
HiruNews
HiruNews
HiruNews
38,598 Views
Top