அணி தொடர் தோல்வி..! வீதிக்கு இறங்கிய பிரபல வீரர்!! காணொளி இணைப்பு
2,788
Views
இந்திய அணியின் முன்னாள் தலைவர் சச்சின் டென்டுல்கர் நேற்றைய தினம் தெரு கிரிக்கட் விளையாடியுள்ளார்.
குறித்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த காணொளி இந்திய அணியின் முன்னாள் வீரரான வினோத் காம்ப்ளியினால் ட்விட்டரில் பதிவேற்றப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டிகள் பரபரப்பாக இடம்பெற்று வரும் நிலையில் , நேற்றிரவு மும்பையில் பிரதான வீதியொன்றில் கிரிக்கட் விளையாடிக்கொண்டிருந்த கட்டிட ஊழியர்களுடன் இணைந்து சச்சின் இவ்வாறு கிரிக்கட் விளையாடியுள்ளார்.
வீதியில் சென்றுக்கொண்டிருந்த போது , அங்கு கட்டிட ஊழியர்கள் தெரு கிரிக்கட் விளையாடுவதை அவதானித்த சச்சின் தீடீரென மகிழூர்தியை நிறுத்தச் சொல்லியுள்ளார்.
அதனை தொடர்ந்து மகிழூர்தியில் இருந்து இறங்கிய சச்சின் குறித்த ஊழியர்கள் விளையாடிக்கொண்டிருந்த இடத்திற்குச் சென்று தன்னையும் விளையாட்டில் இணைத்துக்கொள்ளுமாறு கோரியுள்ளார்.
அங்கிருந்த ஊழியர்களுக்கு தலைக்கால் புரியாமல் , சச்சினுக்கு கைக்கொடுத்து தமது சந்தோசத்தை வௌிப்பட்டுத்திய பின்னர் , விளையாட ஆரம்பித்தனர்.
பின்னர் , அங்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்ததை தொடர்ந்து ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட சச்சின் அவ்விடத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
சச்சின் டென்டுல்கர் தற்போது மும்பை அணியின் தலைமை ஆலோசகராக செயற்பட்டு வருகின்றார்.
இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணி பங்கேற்ற மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
@sachin_rt. Master Blaster good to See you enjoying like Old times