தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி!!

Wednesday, 18 April 2018 - 16:36

%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE+%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%21%21
தமிழ் திரையுலகினர் கடந்த 47 நாட்களாக முன்னெடுத்து வந்த பணிபகிஷ்கரிப்பு போராட்டம் நேற்று நிறைவுக்கு வந்துள்ளது.

டிஜிட்டல் சேவை கட்டணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

நேற்று நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையின் பின்னர் சாதகமான முடிவு எட்டப்பட்ட நிலையில் குறித்த போராட்டம் நிறைவு செய்யப்படுவதாக தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் நடிகர் விஷால் தெரிவித்தார்.

கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி தொடக்கம் இந்த பணி பகிஷ்கரிப்பு போராட்டம் இடம்பெற்று வந்தது.

இதன் காரணமாக புதிய படங்கள் எவையும் கடந்த ஒன்றரை மாதமாக வௌியாகவில்லை.

மேலும் , இந்த போராட்டத்தில் தமிழ் திரையுலகமும் இணைந்துக்கொண்டு தமது ஆதரவை தெரிவித்தது.

அதனால் , படப்பிடிப்புக்களும் ரத்துச் செய்யப்பட்டன.

திரைப்படம் தொடர்பான மற்றைய அனைத்து பணிகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன.

இந்த நிலையில் , திரையரங்க கட்டணத்தை உயர்த்த கோரி திரையரங்க உரிமையாளர்கள் போராட்டத்தில் இறங்கியிருந்தனர்.

பின்னர் , தமிழக அரசுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் அவர்கள் தம் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர்.

எனினும் , தமிழில் எவ்வித புதுப்படங்களும் வௌியாகாததால் , திரையரங்குகளில் பிறமொழி படங்களும் , பழைய தமிழ் படங்களும் திரையிடப்பட்டு வந்தன.

இந்நிலையில் , இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக, டிஜிட்டல் நிறுவனங்கள், தயாரிப்பாளர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நேற்று இடம்பெற்றது.

தமிழக அரசின் சார்பில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி ஆகியோர் இதில் பங்கேற்றிருந்தனர்.

இந்த பேச்சுவார்த்தையில், பணிபகிஷ்கரிப்பை கைவிடுவதாக ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

அதையடுத்து புதிய படங்களை வெளியிடுவது குறித்தும், படப்பிடிப்பு துவங்குவது குறித்தும் அடுத்த சில நாட்களில் முடிவுகள் எடுக்கப்படும் என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் ஊடகங்களுக்கு அறிவித்தார்.