யாருடைய அனுமதிக்காகவும் காத்திருக்கப் போவதில்லை

Wednesday, 18 April 2018 - 19:37

+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88
ஆயுத உற்பத்திகளை மேற்கொள்வதற்கு யாருடைய அனுமதிக்காகவும் காத்திருக்கப் போவதில்லை என்று ஈரான் அறிவித்துள்ளது.

ஈரானின் ஜனாதிபதி ஹசன் ரௌஹானி இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்த நாட்டின் இராணுவ தினத்தை முன்னிட்டு அவர் ஆற்றிய உரையில் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

நாட்டை வெளிநாட்டு அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாப்பதற்கு சக்திவாய்ந்த இராணுவம் தேவை.

இராணுவத்தை சக்தி மயப்படுத்துவதற்கான ஆயுதங்களை உற்பத்தி செய்த, எந்த ஒரு தரப்பின் அனுமதிக்காகவும் காத்திருக்க வேண்டியதில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே ஆயுதம் ஒன்று தேவைப்படும் பட்சத்தில் அதனை தாங்களே உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஈரானின் அணுவிருத்தி செயற்பாடுகளை தடுக்கும் வகையில் மேற்கத்தேய நாடுகள் அந்த நாட்டுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.