ஆடை உற்பத்தி துறையில் மேலதிக அந்நிய செலாவணி

Thursday, 19 April 2018 - 7:41

%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95+%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF
எதிர்காலத்தில் இலங்கையின் ஆடை உற்பத்தி துறையில் மேலதிக அந்நிய செலாவணி கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தக முறுகல் நிலை மேலோங்கக் கூடிய அச்சுறுத்தல் நிலவுகிறது.

இதனால் அமெரிக்காவின் ஆடை இறக்குமதியாளர்கள், சீனா தவிர்ந்த ஏனைய நாடுகளில் இருந்து ஆடை இறக்குமதியை மேற்கொள்ளும் திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் இலங்கைக்கு அதிக நன்மை கிடைக்கப்பெற வாய்ப்புகள் இருப்பதாக, பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.