பாகிஸ்தானுக்கான வெற்றிலை ஏற்றுமதி பாரிய அளவில் அதிகரிப்பு

Thursday, 19 April 2018 - 13:08

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
பாகிஸ்தானுக்கான வெற்றிலை ஏற்றுமதி பாரிய அளவில் அதிகரித்துள்ளது.

வருடாந்தம் அங்கு 5000 தொடக்கம் 6000 மெட்ரிக் தொன் வெற்றிலைகள் ஏற்றுமதி செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் தெங்கு, ஆடை, அரிசி, இரசாயனப் பொருட்கள், இயற்கை றப்பர், றப்பர் கையுறைகள், தேயிலை மற்றும் சுவையூட்டிகள் என்பவற்றின் ஏற்றுமதியும் அதிகளவில் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதே நேரம் பாகிஸ்தானில் இருந்து இலங்கை பருத்தி நூல், சீமெந்து, இரசாயன உரம், மருந்துபொருட்கள், ப்ளாஸ்டிக் பொருட்கள், போக்குவரத்து சாதனங்கள் போன்றவற்றை அதிக அளவில் இறக்குமதி செய்கிறது.