லிபியாவின் படைப்பிரதானிகளின் தலைமை அதிகாரி உயிருடன்

Thursday, 19 April 2018 - 20:25

%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D
லிபியாவின் படைப்பிரதானிகளின் தலைமை அதிகாரி ஜெனரல் கலிஃபா ஹஃப்டார் உயிருடன் இருப்பதாக அந்த நாட்டின் படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நேற்றைய தினம் பங்காசியில் நடத்தப்பட்ட மகிழுந்து குண்டுத் தாக்குதல் ஒன்றில் அவர் கொல்லப்பட்டு விட்டதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் அவர் இந்த தாக்குதலில் உயிரிழக்கவில்லை என தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர் ஃப்ரான்ஸில் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக, ஃப்ரான்ஸின் வெளிவிவகார அமைச்சரை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் அவர் கடுமையான மூளை பாதிப்பை சந்தித்திருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.