விளையாட்டரங்கை அதிர வைத்த க்றிஸ் கெயில் ...!!

Friday, 20 April 2018 - 7:35

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+...%21%21
ஐ.பி.எல் கிரிக்கட் தொடரின் 16வது போட்டியில் கிங்ஸ் இலெவன் பஞ்சாப் அணி 15 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
 
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பாடிய கிங்ஸ் இலெவன் பஞ்சாப், 20 ஓவர்களில் 3 விக்கட்டுகளை இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றது.
 
க்றிஸ் கெயில் ஆட்டமிழக்காமல் 11 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 63 பந்துகளில் 104 ஓட்டங்களைப் பெற்றார்.
 
பதிலளித்து துடுப்பாடிய சன்ரைசர்ஸ் அணி, 20 ஓவர்களில் 4 விக்கட்டுகளை இழந்து 174 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுதோல்வி கண்டது.
 
ஆட்டநாயகனாக க்றிஸ் கெயில் தெரிவானார்.
 
அதேநேரம், ஐ.பி.எல். தொடரில் இதுவரையில் 6 புள்ளிகளைப் பெற்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
 
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 6 புள்ளிகளுடன், ஓட்டவிகித அடிப்படையில் 2ம் இடத்தில் உள்ளது.
 
கிங்ஸ்லெவன் பஞ்சாப் நேற்றைய வெற்றியுடன் மொத்தமாக 6 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளது.
 
சென்னை சுப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகள் தலா 4 புள்ளிகளைப் பெற்று 4ம் மற்றும் ஐந்தாம் இடங்களில் உள்ளன.
 
மும்பை இந்தியன்ஸ், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் மற்றும் டெல்லி டெயார் டெவில்ஸ் ஆகிய அணிகள் தலா 2 புள்ளிகளுடன் இறுதி 3 இடங்களில் உள்ளன.
 


rn
rn

rn
rnrnrn