22 ஆம் திகதி டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம்

Friday, 20 April 2018 - 13:52

22+%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாவதற்கு முன்னர் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

பாடசாலை அதிபர்களுக்கு இவ்வாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, நாளை மறுதினம் 22 ஆம் திகதி நாடளாவிய ரீதியாக உள்ள சகல பாடசாலைகளையும் சுத்தம் செய்யும் பணி இடம்பெறவுள்ளது.

அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள தெற்மேற்கு பருவமழை காரணமாக மேற்கொள்ளப்படும் இந்த டெங்கு ஒழிப்பு தொடர்பில் சகல பாடசாலைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.