ரோஹிங்கியா முஸ்லிம் ஏதிலிகள் கடல் வழியாக இந்தோனேசியா பயணம்

Saturday, 21 April 2018 - 13:16

%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D
மியன்மார் - ரகீன் பிராந்தியத்தில் இருந்து 80க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம் ஏதிலிகள் கடல் வழியாக இந்தோனேசியாவுக்கு பயணித்துள்ளனர்.
 
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட படகொன்றின் மூலம், நேற்று அவர்கள் இந்தோனேசியாவை சென்றடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
 
கடந்த வருடம் மியன்மாரில் ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக பாரிய இன வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டன.
 
இதன்போது பலர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்தும் இருந்தனர்.
 
இந்தநிலையில், இதுவரையில் அண்மைய நாடான பங்களாதேஷூக்கு மாத்திரம் 7 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கியா மக்கள் இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.