விவசாயத்திற்கு பயன்படுத்தக் கூடிய நிலையில் உள்ள குளங்கள்

Sunday, 22 April 2018 - 10:06

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் அறுநூறு சிறுகுளங்கள் உள்ளபோதும்,  அவற்றில் சுமார் 44 சிறிய குளங்கள் மாத்திரமே விவசாயத்திற்கு பயன்படுத்தக் கூடிய நிலையில் உள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் வே.ஆயகுலன் தெரிவித்துள்ளார்.
 
கிளிநொச்சி மாவட்டத்தில் பாரிய நீர்ப்பாசனக்குளங்கள் தவிர கமநலசேவை நிலையங்களின்  கீழ் 600 இற்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன.
 
இவற்றில் சில குளங்கள் பொதுமக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
 
அத்தகைய குளங்களை அடையாளப்படுத்தி எல்லையிடும் நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.