அதிவேகத்தில் பயணித்த சிற்றூர்தியால் ஐவருக்கு நேர்ந்த கதி

Monday, 23 April 2018 - 9:38

%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%90%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF
ஹபரனை பிரதேசத்தில் அதிவேகத்தில் பயணித்த சிற்றூர்தியொன்று வீதியோரத்தில் இருந்த மரமொன்றில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த 5 பேர் தம்புள்ளை மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில் இருவர் கவலைக்கிடமான நிலையில், கண்டி மருத்துவமனைக்கு மாற்றியனுப்பப்பட்டுள்ளனர்.

சிற்றூர்தியில் பயணித்த அனைவரும் ஹபரனை பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பில் ஹபரனை காவல்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.