ஹொரணை இறப்பர் தொழிற்சாலையின் உரிமையாளருக்கு விசேட அறிவித்தல்

Monday, 23 April 2018 - 9:55

%E0%AE%B9%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
ஹொரணை – பெல்லபிட்டிய பிரதேசத்தின் இறப்பர் உற்பத்தி தொழிற்சாலையின் உரிமையாளரை உடன் காவல்துறையில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது அவர் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படும் குருந்துவத்த பிரதேசத்தின் விலாசத்திற்கு இது தொடர்பான கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது குறித்த பிரதேசத்தில் இருந்து அவர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவருக்கு வெளிநாடு செல்லுவதற்கான தடையுத்தரவு ஹொரணை பதில் நீதவானினால் நேற்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த தொழிற்சாலையில் விஷ வாயூ கசிவு காரணமாக ஐந்து பேர் கடந்த வியாழக்கிழமை(19) உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.