தமிழகம் முழுவதிலும் மனித சங்கிலிப் போராட்டங்கள்

Monday, 23 April 2018 - 13:57

%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4+%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
காவிரி மேலாண்மை பேரவை அமைக்குமாறு வலியுறுத்தி தமிழகம் முழுவதிலும் மனித சங்கிலிப் போராட்டங்கள் நடத்தப்படவுள்ளன.

திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட தமிழகத்தின் கட்சிகள் இணைந்து இந்த மனித சங்கிலி போராட்டத்தை நடத்தவுள்ளன.

இந்த போராட்டம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களினதும் தலைநகரங்களில் இன்று மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ளன.

இதேவேளை, காவிரி மேலாண்மை பேரவை அமைப்பது சட்டவிரோதமான என கர்நாடக முதலமைச்சர் சித்தாராமையா இந்திய பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

எதிர்வரும் மே மாதம் 12 ஆம் திகதி கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காவிரி மேலாண்மை பேரவையை வைத்து பாரதீய ஜனதா கட்சி அரசியல் நடத்த முயற்சிப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.