இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையே தீர்மானிக்க வேண்டும்

Tuesday, 24 April 2018 - 12:52

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கட் தொடரை நடத்துவது குறித்து இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையே தீர்மானிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கட் சபையின் தலைவர் நஜாம் சேதி இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் அரசியல் நம்பிக்கைகளின் அடிப்படையிலேயே இந்திய – பாகிஸ்தான் கிரிக்கட் உறவு தங்கியுள்ளது.

இரண்டு நாடுகளுக்கும் இடையில் நிலவும் சமுக அரசியல் பிரிவினைகளால், இரண்டு அணிகளுக்கும் இடையிலான கிரிக்கட் தொடர்பும் தேக்கநிலையில் உள்ளது.

இந்த விடயத்தில் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையே தீர்மானத்தை மேற்கொள்ளும்.

பாகிஸ்தான் இந்தியாவுடன் விளையாட தயாராகவே இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.