பிராந்திய ஒத்துழைப்பு மாநாட்டை புறக்கணிக்கும் இந்தியா..

Wednesday, 25 April 2018 - 7:22

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE..
இந்த ஆண்டு இந்தியா தெற்காசிய நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்பு மாநாட்டை புறக்கணிக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இந்த மாநாடு, இந்த வருடம் பாகிஸ்தானின் ஸ்லாமாபாத் நகரில் நடைபெறவுள்ளது.
 
பேச்சுவார்த்தைகளும், தீவிரவாத செயற்பாடுகளும் சமாந்தரமாக பயணிப்பதை அனுமதிக்க முடியாது என்ற அடிப்படையில், இந்த வருடமும் இந்தியா இந்த மாநாட்டை புறக்கணிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்தியாவின் ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.
 
2016ம் ஆண்டு இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல்களை முன்னிலைப்படுத்தி, இந்திய அப்போது நடைபெறவிருந்த மாநாட்டை புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.