பொதுநலவாய விளையாட்டு போட்டியில் சாதித்த இலங்கை வீரர்களுக்கு பணப்பரிசு

Wednesday, 25 April 2018 - 14:37

%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81+
கடந்த தினத்தில் நிறைவடைந்த 21வது பொதுநலவாய விளையாட்டுக்களில் இலங்கைக்காக பதக்கங்களை வென்ற வீர வீராங்கனைகளுக்கு பணப்பரிசுகள் வழங்கும் வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில ்இன்று இடம்பெறவுள்ளது.

இம்முறை பொதுநலவாய விளையாட்டுக்களில் இலங்கை ஒரு வௌ்ளிப் பதக்கம் மற்றும் 5 வெங்கலப்பதக்கங்களை வென்றது.

இதுவரை இலங்கை பொதுநலவாய விளையாட்டுக்களில் பெற்றுக்கொண்ட அதி கூடிய பதக்கங்கள் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

பழு தூக்கும் போட்டியில் வௌ்ளிப்பதக்கம் வென்ற இந்திக திஸாநாயக்கவிற்கு 40 இலட்சம் ரூபாவும் , வெங்கலப்பதக்கங்களை வென்ற மற்றைய வீரர்களுக்கு தலா 30 இலட்சம் ரூபாவும் இதன் போது பரிசளிக்கப்படவுள்ளது.