இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 24வது போட்டி இன்று

Wednesday, 25 April 2018 - 19:23

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+24%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+
இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 24வது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இந்த போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ரோயல் செலன்ஜர்ஸ் பெங்குளுர் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

இந்த போட்டி, இன்று இரவு 8 மணியளவில், பெங்குளுரில் இடம்பெறவுள்ளது.

இதுவரையில் இடம்பெற்ற போட்டிகளுக்கு அமைய 6 போட்டிகளில் பங்கேற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 5 போட்டிகளில் பங்கேற்று 4 போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் 2 வது இடத்தில் உள்ளது.

3வது இடத்தில், 8 புள்ளிகளுடன் சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணியும், 4 வது இடத்தில் 6 புள்ளிகளுடன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் உள்ளன.

ரோயல் செலன்ஜர்ஸ் பெங்குளுர் அணி 5 போட்டிகளில் பங்கேற்று 2 போட்டிகளில் வெற்றிப் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.