13 ஊடகவியலாளர்களுக்கு சிறைத்தண்டனை

Thursday, 26 April 2018 - 9:59

13+%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88
துருக்கிய நீதிமன்றம் 13 ஊடகவியலாளர்களுக்கு சிறைத்தண்டனை விதித்துள்ளது.

பயங்கரவாத குற்றச்சாட்டுகளின் பேரில் இவ்வாறு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஊடகவியலாளர்கள், எதிர்கட்சி சார்பான பத்திரிகையில் பணிபுரிந்தவர்கள் எனவும், இவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டார்கள் என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த வழக்கில் மேலும் மூன்று ஊடகவியலாளர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அரசாங்கத்திற்கு எதிரான ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில், சுமார் 50 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டதுடன், ஊடகவியலாளர்கள், காவல்துறையினர், இராணுவ அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் என லட்சக்கணக்கானவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.