ஈரான் அணுத்திட்ட உடன்படிக்கையில் இருந்து வௌியேறவுள்ள அமெரிக்கா

Thursday, 26 April 2018 - 19:21

%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+
ஈரானுக்கும், வல்லரச நாடுகளுக்கும் இடையிலான அணு உடன்படிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் கைவிடவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஃப்ரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரன் இதனைத் தெரிவித்துள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப்பை தாம் சந்தித்த போது, குறித்த உடன்படிக்கையை தக்க வைத்துக் கொள்ளும் விடயத்தில் அவருக்கு இணக்கத்தை ஏற்படுத்த முடியாமல் போனதாக மெக்ரன் குறிப்பிட்டுள்ளார்.

தமது நிலைப்பாட்டின் படி, உள்நாட்டு காரணங்களுக்காக குறித்த உடன்படிக்கையில் இருந்து அவர் வெளியேறுவார் என்றும் மெக்ரன் கூறியுள்ளார்.

ஈரானின் அணு விரிவாக்கல் செயற்பாடுகளை தடுக்கும் நோக்கில் உலக வல்லரசுகள் இணைந்து இந்த உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டன.

இதில் இருந்து வெளியேறுவது குறித்து தீர்மானிப்பதற்கு, டொனால்ட் ட்ரம்பிற்கு மே மாதம் 12ம் திகதி வரையில் கால அவகாசம் இருக்கிறது.