Hirunews Logo
%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81
Monday, 14 May 2018 - 17:41
குற்றபத்திரிகையில் இல்லாத விடயங்களுக்காக துமிந்த சில்வாவை குற்றவாளியாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
589

Shares
70,769

Views
 இரு தரப்பின் சந்திப்பும் தற்செயலானது.

 முதலாவது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டது துமிந்த சில்வா மீதே.

 குற்றபத்திரிகையில் இல்லாத விடயங்களுக்காக துமிந்த சில்வாவை குற்றவாளியாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா மீது முதலில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக பல சாட்சிகள் இருந்தாலும் அவற்றை கருத்திற் கொள்ளாது சட்டபூர்வமற்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணிகள் உயர்நீதிமன்றத்தில் நிரூபித்துள்ளனர்.

இது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீட்டு மனு ஐந்து பேர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே ஜனாதிபதி சட்டத்தரணிகள் இதனை தெரிவித்துள்ளனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை நிரபராதியாக்கி விடுதலை செய்யுமாறு தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீட்டு மனு இன்று ஐந்தாவது நாளாக விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

பிரதம நீதியரசர் ப்ரியசாத் டெப் தலைமையிலான ஐந்து பேரடங்கிய நீதியசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

மேல்நீதிமன்ற வழக்கு விசாரணையின் பல சாட்சிகளில், துமிந்த சில்வா மீதே முதலில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதும் அதனை கருத்திற் கொள்ளாது தீர்ப்பு வழங்குவது எவ்வாறு என ஜனாதிபதி சட்டத்தரணி அனூஜ பிரேமரத்ன இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார்.

துமிந்த சில்வாவின் பின் தலைப்பகுதியில் துப்பாக்கி தோட்டா பாய்ந்ததாக சட்ட மருத்துவ அறிக்கை மூலம் உறுதியாகியுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி சட்டத்தரணி, 12 வது பிரதிவாதி மேல்நீதிமன்றில் வெளியிட்ட கருத்தை மேற்கோள் காட்டினார்.

துப்பாக்கிப் சூடு நடத்தப்பட்டதாக ஏற்றுக் கொள்ளுமாறு குற்றத்தடுப்பு விசாரணைத் திணைக்களம் அவரை அறிவுறுத்தியபோதும், அவர் அதற்கு மறுப்புத் தெரிவித்த நிலையில், அவரை 12ம் பிரதிவாதியாக பெயரிடப்பட்டதாக சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.

அந்த கருத்து நம்பகத்தன்மையுடனான கருத்து என்று, வழக்கின் தீர்ப்பில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள போதிலும், வழக்கு விசாரணையில் மிகமுக்கியமானது என்று கருதப்படும் சாட்சிக் கூண்டில் இருந்து வழங்கப்பட்ட அந்த விசேட அறிவிப்பை உரிய வகையில் ஆய்வுக்கு உட்படுத்த, தீர்ப்பு வழங்கலின் போது நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஜனாதிபதி சட்டத்தரணி இதன்போது குறிப்பிட்டார்.

குற்றபத்திரிகையில் இல்லாத விடயங்களுக்காக துமிந்த சில்வாவை குற்றவாளியாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி, அது ஒருபோதும் சட்டப்பூர்மானது இல்லை என்றும் கூறினார்.

சம்பவத்தின் போது, இரண்டு தரப்பும் தற்செயலாக சந்தித்ததில் , எந்தவித பொது நோக்கமும் இருக்கவில்லை என்று அவர் நிரூபித்தார்.

இதுதவிர, வழக்கின் தீர்ப்பில் உள்ள பல குறைபாடுகள் தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி, இன்றைய தினமும் நீதிமன்றின் அவதானத்துக்கு கொண்டுவந்தார்.

இதன்படி,

 எந்த ஒரு சாட்சியாளரதும் சாட்சி 100 சதவீதம் ஏற்றுக் கொள்ள முடியாது என தீர்ப்பிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளமை.

 மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவின் ஒரு நீதிபதி, வழக்கு தீர்ப்பை தயாரிக்காமையினால்.

 மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சட்டபூர்வமானதாக இல்லாமை.

 சாட்சி அல்லது உரிய காரணங்கள் அல்லாமல், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்தசில்வா, பிரபல அரசியல்வாதி மற்றும் பிரபலத்தன்மை மாத்திரம் கருத்திற்கொண்டு தீர்ப்பு வழங்கப்பட்டமை. 

 துமிந்தசில்வாவை குற்றவாளியாக்குவதற்காக சோடிக்கப்பட்ட சாட்சிகளின் முரண்பாடு மற்றும் பரஸ்பரத்தன்மை என்பவற்றைக் கருத்தில் கொள்ளாமைக்கான காரணங்கள் விளக்கப்படாமை.

 முன்வைக்கப்பட்ட சாட்சி நீதியானதா? என்பதை பரிசீலிக்காமல், அரச சட்டத்தரணியின் வாதத்துக்கு அமைய மாத்திரம் தீர்ப்பு வழங்கப்பட்டமை.

 துப்பாக்கி பயன்படுத்தப்பட்ட எந்த சாட்சியும் வழக்கு விசாரணையின் போது முன்வைக்கப்பட்டிருக்காத போதும், அதற்காக துமிந்தசில்வாவிற்க்கு தண்டனை வழங்கப்பட்டமை.

 துமிந்தசில்வா தரப்பினர் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள் மற்றும் கருத்துக்கள், பொருட்படுத்தப்படாமை.

ஆகிய விடயங்களை ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.

இன்றையதினம் தமது வாதத்தை நிறைவு செய்த ஜனாதிபதி சட்டத்தரணி அனூஜ பிரேமரத்ன, பல குறைபாடுகள் நிலவும் வழக்கின் தீர்ப்பை லட்சம் தடவைகள் வாசித்தாலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்தசில்வாவை குற்றவாளியாக்கியது எவ்வாறு என்று கண்டறிய முடியாதிருப்பதாக மீண்டும் குறிப்பிட்டார்.

மேன்முறையீட்டு மனு மேலதிக விசாரணைகளுக்காக எதிர்வரும் 18ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
704 Views
HiruNews
HiruNews
HiruNews
6,711 Views
HiruNews
HiruNews
HiruNews
5,397 Views
HiruNews
HiruNews
HiruNews
10,935 Views
HiruNews
HiruNews
HiruNews
111 Views
HiruNews
HiruNews
HiruNews
38,926 Views
Top