சுதந்திர கட்சியுடன் இணைந்து, ஐ.தே.கட்சியை எதிர்க்க முனைவது, பலவீனமான செயல்

Monday, 21 May 2018 - 20:06

%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%2C+%E0%AE%90.%E0%AE%A4%E0%AF%87.%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%2C+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
ஜனாதிபதி தலைமையிலான சிறிலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து, ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரான சக்தியை கட்டியெழுப்ப முடியாது என்று மகிந்த அணி தெரிவித்துள்ளது.

அதன் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவருமான ஜீ.எல்.பீரிஷ் இதனைத் தெரிவித்துள்ளார்.

சுதந்திர கட்சியைச் சேர்ந்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடன் இணைவது வரவேற்கப்படுகிறது.

ஒன்றிணைந்த எதிரணி மற்றும் சிறிலங்கா பொதுஜன முன்னணி ஆகியவற்றின் கொள்கைகளை முழுமையாக ஏற்றுக் கொண்டு தங்களுடன் இணைவோரை வரவேற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், சிறிலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து, ஐக்கிய தேசிய கட்சியை எதிர்க்க முனைவது, பலவீனமான செயல் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.