நேற்றைய போட்டியில் வெற்றி பெற்ற அணி...!!

Wednesday, 23 May 2018 - 8:38

%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF...%21%21
11வது ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும் முதல் அணியாக சென்னை சுப்பர் கிங்ஸ் அணி தெரிவானது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத்துடன் நேற்றிரவு இடம்பெற்ற இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதிகான் போட்டியில் 2 விக்கட்டுக்களால் சென்னை அணி வெற்றிபெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, 20 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 139 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து. 140 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய சென்னை அணி, 19.1 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அணித் தலைவர் டோனி உட்பட 6 வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டத்துடன் ஆட்டமிழந்தனர்.

இந்த நிலையில், பரபரப்பாக இடம்பெற்ற ஆட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய டுப்பிளிஸிஸ்ஸின் துப்பாட்டத்தால், சென்னை அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

42 பந்துகளில் 5 நான்கு ஓட்டங்கள், 4 ஆறு ஓட்டங்கள் அடங்களாக ஆட்டமிழக்காமல் 67 ஓட்டங்களை டுப்பிளிஸிஸ் பெற்றுக்கொடுத்தார்.

இதேநேரம், 9 ஆவது வீரராக களமிறங்கிய சர்துல் தாகூர் 5 பந்துகளில் 3 நான்கு ஓட்டங்கள் அடங்களாக ஆட்டமிழக்காமல் 15 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்து அணியின் வெற்றிக்கு பங்களிப்பு செய்தார்.

இதேவேளை, வெளியேற்றுதல் சுற்றுக்கான போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் இன்று மோதவுள்ளன.

கொல்கத்தாவில் இன்றிரவு 7 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இதில் வெற்றிபெறும் அணியுடன், நேற்றைய போட்டியில் தோல்வியடைந்துள்ள சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள இறுதிப் போட்டிக்கான இரண்டாவது தகுதிகான் போட்டியில் பங்கேற்கவுள்ளது.