89 மில்லியன் ரூபா நிதியுதவி

Thursday, 24 May 2018 - 8:19

89+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF
இலங்கையில் ஏற்படுகின்ற இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்வதற்காக 89 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
 
அவுஸ்ரேலிய அரசாங்கம், உலக உணவு வேலைத்திட்டம் மற்றும் யுனிசெவ் அமைப்பு ஆகியன இணைந்து இந்த நிதியை இலங்கைக்கு வழங்கியுள்ளன.
 
இயற்கை அனர்த்தத்திற்கு தயாராவதற்கும், உடனடியாக செயல்படுவதற்குமாக அந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.
 
மூன்று வருட காலத்திற்கு இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ள நிலையில், அதற்கான உடன்படிக்கை அண்மையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
 
வெள்ளம், கடும்காற்று, வறட்சி உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ளும் நாடுகளில் முக்கிய நாடாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.