ஸ்டெர்லைட் தொழிற்சாலை மூடப்படும் என அறிவித்தல்

Thursday, 24 May 2018 - 21:44

%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+
தமிழகத்தில் இயங்கும் ஸ்டெர்லைட் தொழிற்சாலை இயங்காது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியதாக தமிழக செய்திகள் தெரிவித்துள்ளன.

ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கான தண்ணீர், மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளதால் மீண்டும் செயல்பட வாய்ப்பில்லை எனவும், அரசின் எண்ணமும் அதுதான். எனவே பொதுமக்கள் அமைதி திரும்ப ஒத்துழைக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 பெண்கள் உள்ளிட்ட13 பேர் உயிரிழந்தனர்.

19 பெண்கள் உள்பட 102 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில் தூத்துக்குடியில் அமைதியை நிலைநாட்ட பல்வேறு தரப்பினருடன் காலை முதல் பேச்சுவார்த்தை நடத்தியதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி மேலும் கூறியதாக அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.