தூத்துக்குடி சம்பவம் / சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

Saturday, 26 May 2018 - 7:42

%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D+%2F+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தை மத்திய புலனாய்வு பணியகம் விசாரணை நடத்த உத்தரவிட கோரும் வழக்கில் தமிழக உள்துறை செயலாளருக்கும், மத்திய புலனாய்வு பணியகத்துக்கும் அறிவித்தல் அனுப்புமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் - தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் செப்பு ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் மீது காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் பிரயோகத்தில் 13 பேர் பலியானதுடன், பலர் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தாக்குதல் மற்றும் இணைய சேவை முடக்கம் என்பன தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த வழக்கிற்கு பதிலளிக்குமாறு தமிழக உள்துறை செயலாளருக்கும், மத்திய புலனாய்வு பணியகத்துக்கும் அறிவித்தல் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.