நான்கு சமூக வலைதளங்களுக்கு எதிராக முறைப்பாடு

Saturday, 26 May 2018 - 7:44

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81
பேஸ்புக், கூகுள், இன்ஸ்டகிராம் மற்றும் வட்ஆப் முதலான சமூக வலைதளங்களுக்கு எதிராக முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

ஜி.டி.பி.ஆர் GDPR எனப்படும் பொதுத் தரவு பாதுகாப்பு ஒழுங்குமுறை தகவல் பாதுகாப்பு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்ட சில மணித்தியாலங்களில் இந்த முறைப்பாடுகள் பதிசெய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பயனர்கள் சேவைகளை பயன்படுத்த இலக்குடனான விளம்பரங்களுக்கு இணக்கம் தெரிவிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுவதாக நிறுவனங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

இந்த முறைப்பாடுகள் உறுதி செய்யப்பட்டால், குறித்த வலைதளங்கள் எவ்வாறு செயற்படுகின்றன என்பதை மாற்ற வேண்டும் என்றும், அபராதம் விதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜி.டி.பி.ஆர் எனப்படும் பொதுத் தரவு பாதுகாப்பு ஒழுங்கு விதியானது ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய சட்டமாகும்.

தனிப்பட்ட தரவுகளை எவ்வாறு சேகரிப்பது, பயன்படுத்துவது என்பதை இது மாற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியே உள்ள நிறுவனங்கள் கூட, ஐரோப்பிய ஒன்றியத்தில் தமது சேவைகளை வழங்க இந்தப் புதிய சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.