மீண்டும் பேச்சுவார்த்தைக்கு பச்சைக் கொடி காட்டிய ட்ரம்ப்

Saturday, 26 May 2018 - 8:43

%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் வுடனான பேச்சுவார்த்தை இரத்துச் செய்யப்பட்டாலும் அது இடம்பெறக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனாட்ல் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பு ஏற்கனவே குறிப்பிடப்பட்டது போல் ஜூன் மாதம் 12ம் திகதி சிங்கப்பூரில் இடம்பெறக்கூடும் என அவர் நேற்று தெரிவித்துள்ளார்.

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று ஜூன் மாதம் 12 ஆம் திகதி சிங்கப்பூரில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இதற்காக அமெரிக்க தரப்பில் இருந்து சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

அணுவாயுத சோதனை கூடங்களை அழித்துள்ள வடகொரியா, அந்த சில நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது.

பி்ன்னர், வெள்ளை மாளிகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய டொனால்ட் டிரம்ப் , கடந்த வியாழக்கிழமை கிம் உடனான ஜூன் 12 ஆம் திகதி சந்திப்பை ரத்துச் செய்வதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.