நேற்றைய போட்டியில் அசாத்திய திறமைகளை வௌிப்படுத்திய பிரபல வீரர்!! (காணொளி)

Saturday, 26 May 2018 - 9:47

%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%21%21+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
11ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக்கின் இறுதிப் போட்டிக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தகுதி பெற்றுள்ளது.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிராக நேற்றிரவு கொல்கத்தாவில் இடம்பெற்ற இரண்டாவது தகுதிகான் சுற்றில் சன்ரைசர்ஸ் அணி 14 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, 20 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 174 ஓட்டங்களைப் பெற்றது.

இதையத்து, 175 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, 20 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்தது.

சன்ரைசர்ஸ் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் ரஷிட் கான் 10 பந்துகளில் 4 ஆறு ஓட்டங்கள் 2 நான்கு ஓட்டங்கள் அடங்களாக ஆட்டமிழக்காமல் 34 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

அத்துடன், நான்கு ஓவர்கள் பந்துவீசி 19 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

நேற்றைய போட்டியில் வெற்றிபெற்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, நாளை இடம்பெறவுள்ள ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியுடன் மோதவுள்ளது.



10 பந்துகளில் 34 ஓட்டங்கள்.....
rn
rn

19 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்கள்....
rn
rn

போட்டியின் சிறப்பம்சங்கள்...
rn