இங்கிலாந்து அணி 91 ஓட்டங்கள்

Saturday, 26 May 2018 - 19:20

+%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+91+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் தற்சமயம் இடம்பெற்று வருகிறது.
 
லண்டனில் இடம்பெறும் இந்த போட்டியில், தமது 2வது இன்னிங்ஸில் துடுப்பாடி வரும் இங்கிலாந்து அணி சற்று முன்னர் வரை 2 விக்கட்டுக்களை இழந்து 91 ஓட்டங்களை பெற்றுள்ளது.
 
முன்னதாக பாகிஸ்தான் அணி தமது முதல் இன்னிங்ஸில் 9 விக்கட்டுக்களை இழந்து, 363 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
 
பாகிஸ்தான் அணி சார்பில் பாபர் அசம் 68 ஓட்டங்களை அதிக பட்சமாக பெற்று கொடுத்தார்.
 
பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் ஜேம்ஸ் அன்டர்சன் மற்றும் பென் ஸ்டெக்ஸ் ஆகியோர் தலா 3 விக்கட்டுக்களை வீழ்த்தினர்.
 
போட்டியில், இங்கிலாந்து அணி தமது முதல் இன்னிங்ஸில் 184 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
 
துடுப்பாட்டத்தில் அலஸ்டர் குக் 70 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்று கொடுத்தார்.
 
பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில், மொஹம்மட் அப்பாஸ் மற்றும் ஹசன் அலி  ஆகியோர் தலா 4 விக்கட்டுக்களை வீழ்த்தினர்.