பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மீது வரிச் சுமை

Sunday, 27 May 2018 - 19:37

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88+
இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வரிச்சுமையை சுமத்தி, அரசாங்கம் மேலும் அழுத்தத்தை கொடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.

வலஸ்முல்ல பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பாதாள உலக குழுவினர், நாட்டை நிர்வகிக்கும் நிலை உருவாகியுள்ளது.

எதிர்கால தலைமுறையினரை பாதுகாக்கும் பொறுப்பு அனைவருக்கும்.

ஒருபுறத்தில் வறட்சி மற்றும் வெள்ள அனர்த்தங்களினால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இந்தநிலையில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வரிசுமையை சுமத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மகிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.