மேலும் ஒரு ஆட்டநிர்ணய காணொளி வெளியானது

Sunday, 27 May 2018 - 19:49

%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81+
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்ற 20க்கு 20 கிரிக்கட் போட்டி ஒன்றின் போது இலங்கை அணியின் 2 முன்னாள் வீரர்கள் இருவர் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டமை தொடர்பான தகவலை அல்ஜெசீரா செய்தி சேவை வெளியிட்டுள்ளது.

முன்னாள் வீரர்களான ஜீவந்த குலதுங்க மற்றும் தில்ஹார லொக்கு ஹெட்டிகே ஆகியோர், ரோபின் மொரிஸ் என அழைக்கப்படும் சூதாட்டகாரருடன் இணைந்து ஆட்டநிர்ணயத்தில் ஈடுபட்டதாக அந்த செய்தி சேவை குறிப்பிட்டுள்ளது.

காலி சர்வதேச விளையாட்டரங்கின் உதவி முகாமையாளர், மைதான வடிவமைப்பாளர், முன்னாள் கிரிக்கட் வீரருமான தரிந்து மென்டிஸ் ஆகியோர், ஆட்டநிர்ணயத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் அல்ஜெசீரா செய்தி சேவை தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.