மூன்றாவது முறையாகவும் கிண்ணத்தை கைப்பற்றியது சென்னை

Monday, 28 May 2018 - 6:32

%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88
11வது இந்தியன் பிரிமியர் லீக் போட்டியில் வெற்றிக்கிண்ணத்தை சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வெற்றிக்கொண்டது.

மும்பை வங்கடே மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்ட சென்னை அணி 8 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதன்படி, துடுப்பெடுத்தாடிய சன்ரைசஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்த நிலையில் 178 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் கேன் வில்லியன்ஸ்சன் 47 ஓட்டங்களையும், யூசுப் பதான் 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பதலளித்த சென்னை அணி 18.3 ஓவர்களில் 2 விக்கட்டுக்களை மாத்திரமிழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் சேன் வொட்சன் ஆட்டமிழக்காமல் 117 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

அதன்படி, இந்தியன் பிரிமியர் லீக் போட்டித் தொடரில் மூன்றாவது முறையாகவும் சென்னை அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

போட்டியின் பின்னர் வழங்கப்பட்ட விருது விபரங்கள் கீழே..

ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை அணிக்கு இந்திய ரூ 20 கோடி பரிசு. 

இரண்டாவது இடம் பிடித்த ஐதராபாத் அணிக்கு - 12.5 கோடி பரிசு.

ஆட்ட நாயகன் - வொட்சன் (ரூ. 5 லட்சம் ) 

பிட்ச் மற்றும் மைதானத்திற்கான விருது (7+ போட்டிகள்) - கொல்கத்தா மைதானம் - ரூ. 50 லட்சம். 

பிட்ச் மற்றும் மைதானத்திற்கான விருது (7போட்டிகளை விட குறைவாக நடந்த மைதானம்) - பஞ்சாப் மைதானம் - (ரூ. 25 லட்சம்) 

வளர்ந்து வரும் இளம் வீரர் - ரிஷப் பண்ட் (10 லட்சம்) 

ஐபிஎல் ஃபேர் பிளே விருது - மும்பை அணி (10 லட்சம்) 

மிக சிறப்பான பிடியெடுப்பு - டிரெண்ட் போல்ட் (டெல்லி அணி)- (10 லட்சம்) 

சிறப்பான அதிரடி துடுப்பாட்ட விருது - சுனில் நரேன் (கொல்கத்தா அணி) - (10 லட்சம்)

ஸ்டைலிஸ் வீரர் -ரிஷப் பண்ட் (டெல்லி அணி) - (10 லட்சம்) 

ஊதா தொப்பி விருது - அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரருக்கு வழங்கப்பட்டும் விருதை பஞ்சாப்பின் ஆண்ட்ரிவ் டை பெற்றார். (24 விக்கெட்டுகள்) - (10 லட்சம்) 

செம்மஞ்சள் தொப்பி விருது - இந்த தொடரில் அதிக ஓட்டங்களை குவித்த வீரருக்கு வழங்கப்பட்டும் செம்மஞ்சள் விருதை ஐதராபாத் அணியின் கேன் வில்லியம்சன் பெற்றார். - (10 லட்சம்) 


rnrn
rnrn