Hirunews Logo
67+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D+%28%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%29
Wednesday, 13 June 2018 - 15:37
67 வருடங்களாக அறையொன்றில் வாழ்க்கையை தொலைத்த சோக சம்பவம் - மனிதாபிமானமற்ற குடும்பம் (புகைப்படம்)
8,712

Views
7 வயதிலிருந்து 6 தசாப்தங்களாக பாழடைந்த அறை ஒன்றிற்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண் ஒருவரை காவல் துறையினர் மீட்டுள்ளனர்.

இந்த சம்பவம் மாவவெல்ல, மொல்லிகொட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 வயதில் இருந்து 67 வருடங்களாக வீட்டிற்குள் அமைக்கப்பட்டுள்ள கூடாரம் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணையே காவல் துறையினர் மீட்டுள்ளனர்.

உணவு, நீர் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் தொடர்பில் நபர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டிற்கமையவே அவர் மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணை மீட்க காவல்துறையினர் சென்ற போது, அவர் மயக்கமடைந்த நிலையில் இருந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக மீட்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அடைக்கப்பட்ட பெண் திருமணமாகாத 74 வயதான முத்துமெனிக்கே என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பெற்றோரிடம் இருந்து கடந்த 1951 ஆம் ஆண்டு 7 வயதில் மாவனெல்ல பிரதேசத்திற்கு அழைத்து வந்த போதிலும் அவருக்கு கல்வி கற்க அனுமதிக்காமல் வீட்டுப்பணிப்பெண்ணாக வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட குறித்த வயோதிப பெண்ணிடம் காவல் துறையினர் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள முயற்சித்துள்ள போதிலும் அவரின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளமையினால் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

அத்துடன் குறித்த பெண் அடைக்கப்பட்டிருந்த வீட்டின் உரிமையாளருக்கு எதிராக காவல் துறையினர் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதுடன், சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தயாராகி வருகின்றனர்.

எவ்வாறாயினும் 7 வயது சிறுமியாக வந்தவர் 74 வயதுடைய கிழவியாக பாழடைந்த அறைக்குள்ளிருந்து மீட்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
மலையகத்தில் சீரற்ற காலநிலை
Wednesday, 15 August 2018 - 11:13
மேல் கொத்மலை நீர் தேக்கம் மேல் கொத்மலை நீர் தேக்கம் போக்குவரத்து... Read More
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
963 Views
HiruNews
HiruNews
HiruNews
630 Views
HiruNews
HiruNews
HiruNews
5,961 Views
HiruNews
HiruNews
HiruNews
13,418 Views
HiruNews
HiruNews
HiruNews
150 Views
HiruNews
HiruNews
HiruNews
41,614 Views
Top