Hirunews Logo
%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9+-++%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%2C+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
Wednesday, 13 June 2018 - 19:32
குற்றச் செயல்கள் குறைவடைந்துள்ளன - வடக்கு, கிழக்கு செயலணி குறித்து கவனம்
555

Views
தற்போது நாட்டினுள் குற்றச் செயல்கள் குறைவடைந்து வருவதை காணக்கூடியதாக உள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.

இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

இதேவேளை, வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக ஜனாதிபதி தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள செயலணி குறித்து, அமைச்சரவையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் அமைச்சர் கயந்த கருணாதிலக்க இதனை தெரிவித்துள்ளார்.
 
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் மோதல்நிலை முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் அந்த பகுதிகளில் சமூகம் மற்றும் பொருளாதாரம் அபிவிருத்திக்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
 
எனினும் அந்த பிரதேச மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அந்த வேலைத்திட்டங்களின் ஊடாக போதுமான அழுத்தம் பிரயோகிக்கப்படவில்லை என்பது அவதானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
 
இந்த நிலையில், குறித்த பகுதிகளில் அரசாங்கத்தின் பல்வேறு நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டங்களை வழிநடத்தல், ஒருங்கிணைத்தல் மற்றும் மீளாய்வுக்கு உட்படுத்தல் என்பனவற்றுக்காக, ஜனாதிபதியின் தலைமையின் கீழ் செயலணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
 
அந்த செயலணியில் பிரதமர், மாகாண ஆளுநர்கள், மாகாண செயலாளர்கள், இராணுவம் மற்றும் காவற்துறையினர் உள்ளடங்களாக இந்த செயலணியை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையின் கவனத்திற்கு எடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,269 Views
HiruNews
HiruNews
HiruNews
13,177 Views
HiruNews
HiruNews
HiruNews
9,540 Views
HiruNews
HiruNews
HiruNews
25,480 Views
HiruNews
HiruNews
HiruNews
112 Views
HiruNews
HiruNews
HiruNews
59,824 Views
Top