அரவிந்த டி சில்வாவின் அதிரடி முடிவு

Sunday, 17 June 2018 - 7:12

%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81
இலங்கை கிரிக்கட்டின் ஆலோசகராக இணையுமாறு, விளையாட்டுத்துறை அமைச்சரினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை இலங்கை அணியின் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வாவும் நிராகரித்துள்ளார்.

இலங்கை கிரிக்கட்டின் ஆலோசகர்களாக இணையுமாறு, இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்தன, முத்தையா முரளிதரன், அரவிந்த டி சில்வா மற்றும் ரொஷான் மஹாநாம ஆகியோருக்கு விளையாட்டுத்துறை அமைச்சரினால் அண்மையில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த கோரிக்கையை, முன்னதாக மஹேல ஜெயவர்தன, முத்தையா முரளிதரன், மற்றும் ரொஷான் மஹாநாம ஆகியோர் நிராகரித்திருந்த நிலையில், நேற்றைய தினம் குமார் சங்கக்கார மற்றும் அரவிந்த டி சில்வா ஆகியோரும் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.