FIFA 2018 - நேற்றைய போட்டிகள்

Sunday, 17 June 2018 - 7:45

FIFA+2018+-+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
ரஷ்யாவில் இடம்பெற்று வரும் உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் நேற்றைய தினம் நான்கு போட்டிகள் இடம்பெற்றன.

சீ பிரிவில் இடம்பெற்றுள்ள பிரான்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டியில் பிரான்ஸ் அணி 2க்கு 1 என்ற கணக்கில் வெற்றிப்பெற்றது.

அதுபோல், டி பிரிவில் இடம்பெற்றுள்ள ஆர்ஜென்டீனா மற்றும் ஐஸ்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி கோல்கள் எதுவும் பெறப்படாத நிலையில் சமநிலையில் நிறைவுக்கு வந்தது.
 
சீ பிரிவில் இடம்பெற்ற பெரு மற்றும் டென்மார்க் அணிகளுக்கு இடையிலான போட்டியில், டென்மார்க் அணி ஒன்றுக்கு பூச்சியம் என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்றது.

டி பிரிவில் இடம்பெற்ற நைஜீரியா மற்றும் குரோசியா அணிகளுக்கு இடையிலான போட்டியில் குரோசியா அணி 2க்கு பூச்சியம் என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்றது.

இதனிடையே இன்றைய தினம் மூன்று போட்டிகள் இடம்பெறவுள்ளன.

பிரிவு ஈ யில் இடம்பெற்றுள்ள கொஸ்டாரிக்கா மற்றும் செர்பியா அணிகளுக்கு இடையிலான போட்டியும், பிரேசில் மற்றும் சுவிச்சர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியும் இடம்பெறவுள்ளது.

அதேபோல், பிரிவு எப் பில் இடம்பெற்றுள்ள ஜெர்மனி மற்றும் மெக்சிகோ அணிகளுக்கு இடையிலான போட்டியும் இன்று இடம்பெறவுள்ளது.