காலி துறைமுகப்பகுதியில் இடம்பெறவுள்ள படகு கண்காட்சி

Sunday, 17 June 2018 - 13:32

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை, அபிவிருத்தி யுக்திகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு மற்றும் படகு கட்டும் தொழில்நுட்ப நிலையம் என்பன இணைந்து படகு கண்காட்சி மற்றும் படகு களியாட்ட விழா ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிகழ்வு காலி துறைமுகப் பகுதியில் எதிர்வரும் ஒக்டோபர் 26ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இது தொடர்பான அங்குராற்பண நிகழ்வொன்று அண்மையில் கொழும்பில் இடம்பெற்றது.

அங்குராற்பண நிகழ்வில் கலந்து கொண்டு பல அமைச்சர்கள் உரையாற்றினர்.

இப்படியான நிகழ்வுகள் மூலம் நீரியல் விளையாட்டுக்கள் மற்றும் படகு தொடர்பான போட்டிகள் எதிர்காலத்தில் சர்வதேச தரத்திற்கு அமைய மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படியான விளையாட்டுக்களை மேம்படுத்துவதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வரவழைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலியில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ள இந்தியா, சிங்கப்பூர், சீஷெல், மாலைதீவு, தென் கொரியா, பெல்ஜியம், மத்திய கிழக்கு நாடுகள், ஜேமனி, ஹொலண்ட் மற்றும் பிருத்தானியா உட்பட பல நாடுகளை சேர்ந்த இத்துறைசார் நிபுணர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இது தவிர, எதிர்காலத்தில் இலங்கையில் சர்வதேச தரத்தை கொண்ட நீரியல் உயர் கல்வி போன்றவற்றை அறிமுகப்படுத்த உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.