சந்திமால் மீது ICC குற்றச்சாட்டு!

Sunday, 17 June 2018 - 14:35

%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+ICC+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%21
பந்தின் அமைப்பை மாற்றியமை தொடர்பில் இலங்கை அணித்தலைவர் தினேஸ் சந்திமால் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணியுடனான 2ஆவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான நேற்றைய போட்டியின் போது ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இலங்கை அணி மைதானத்திற்குள் நுழைவதை புறக்கணித்தது.

இரண்டாம் நாள் ஆட்டத்தின்போது, பந்தின் அமைப்பில் மாற்றம் ஏற்பட்டமையினால், பந்தினை மாற்றுவதற்கு நடுவர்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

பந்தின் அமைப்பில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டினை இலங்கை வீரர்கள் நிராகரித்ததனர்.

அத்துடன், எதிர்ப்பினை வெளியிடும் நோக்கில் மைதானத்தில் நின்றுகொண்டிருந்தமையால் போட்டி 2 மணித்தியாலங்கள் தாமதமடைந்தது.

இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில், தினேஷ் சந்திமாலுக்கான போட்டிக்கான கொடுப்பனவு 75 சதவீதம் நஷ்டஈடு அறவிடப்படுவதுடன், 3 தண்டப் புள்ளிகளும் வழங்கப்படும் என சர்வதேச கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.