ஆப்கான் கார்குண்டுத் தாக்குதலில் 36 பேர் பலி

Sunday, 17 June 2018 - 19:27

%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+36+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட கார்குண்டுத் தாக்குதலில் 36 பேர் பலியாகியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் நங்கஹார் மாகாணத்தில் இந்த கார் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

றமழான் பெருநாளை முன்னிட்டு ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கும் தலீபான்களுக்கும் இடையில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பொதுமக்களும் ஆப்கானிய பாதுகாப்புப் படைகளும், தலீபான்களும் கூடியிருந்த ஒரு கூட்டத்தில் இந்த கார் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் 20 பேர்வரையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், சிகிச்சைகள் பலன் இன்றி பலர் மரணித்தனர்.

சம்பவத்தில் 65 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், மரணித்தவர்களில் அனைத்து தரப்புக்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நைஜீரியாவில் போக்கோஹராம் தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக்குண்டு தாக்குதலில் 31 பேர் மரணித்தனர்.

நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள டம்போவா நகரத்தில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போகோஹராம் கிளர்ச்சியாளர்களுக்கும், நைஜீரிய நாட்டு ராணுவத்தினருக்கும் மோதல் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், போகோஹராம் கிளர்ச்சியாளர்களால் இரண்டு இடங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.