இலங்கை அணி வலுவான நிலையில்

Monday, 18 June 2018 - 9:44

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று தொடரவுள்ளது.

இந்த நிலையில், போட்டியில், தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பாடிவரும் இலங்கை அணி, நேற்றைய நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கட்டுக்களை இழந்து 334 ஓட்டங்களை பெற்றிருந்தது.

முன்னதாக மேற்கிந்திய தீவுகள் அணி தமது முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 300 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸில் 253 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

அதன்படி, இலங்கை அணி தமது இரண்டாவது இனிங்சில் 2 விக்கட்டுகள் கைவசம் உள்ள நிலையில் 287 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.

போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று என்பது குறிப்பிடத்தக்கது.