கிடுகிடுவென உயரும் மரக்கறிகளின் விலை

Tuesday, 19 June 2018 - 7:44

%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88
சந்தையில் மரக்கறிகளின் விலை தொடர்ந்தும் அதிகரித்து செல்வதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பெய்த கடும் மழைக்காரணமாக மரக்கறிகள் அழிவடைந்துள்ளன.

இதன் காரணமாக உரிய வகையில் மரக்கறி உற்பத்தியை மேற்கொள்ள முடியாது போனதாக விசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்கமைய, மலையகத்தில் உற்பத்தி செய்யப்படும் கறி மிளகாய், லீக்ஸ், கரட், போஞ்சி, தக்காளி மற்றும் கோவா ஆகிய மரக்கறிகள் கிலோ ஒன்று 100 முதல் 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.