14 கொலை, தீராத பகை.. தொடரும் வெறிச்செயல்...!

Tuesday, 19 June 2018 - 11:48

14+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%2C+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%88..+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D...%21
இந்திய தலைநகர் டெல்லியில் பட்டப்பகலில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னால் சினிமாவை மிஞ்சும் வகையில் ரத்த சரித்திரம் ஒன்று உள்ளமை தெரியவந்துள்ளது.

கொலை, பதில் கொலை என உயிர்களைப் பறித்தும் இன்னும் ரத்த வெறி கொண்டு அலைகிறது, ரவுடி கும்பல்!

டெல்லியில் ரவுடிகள் நேற்று காலை துப்பாக்கியால் மோதிக்கொண்ட சம்பவத்தில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

6 பேர் படுகாயமடைந்தனர். டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள புராரியில் நேற்று காலை 10.15 மணி அளவில் உற்பயறிச் கூடாரத்திற்கு சென்றுவிட்டு வந்த முகுல் (16), ஜிதேந்தர், ஹிமன்சு, சுரிந்தர் ஆகியோர் தமது காருக்குத் திரும்பினர்.

திடீரென்று எதிரே வந்த இன்னொரு சொகுசு காரில் இருந்த முகமூடி அணிந்த ரவுடிகள் அவர்களை நோக்கி சரமாரியாகச் சுட்டனர்.

இதைக் கண்டதும் காருக்குள் சென்றவர்கள் தப்பியோடினர். அருகில் உள்ள வீதியில் மறைந்திருந்து அவர்களும் பதில் துப்பாக்கித் தாக்குதல் நடத்தினர்.

இந்தத் துப்பாக்கிச் சண்டையில் முகில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும் அந்தப் பகுதியைச் சேர்ந்த 3 பேரும் பலியாயினர். முகுலில் உறவினர்களான ஜிதேந்தர், ஹிமன்சு, சுரிந்தர் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

பட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவத்தால் மக்கள் அலறியடித்து ஓடி னர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்தச் சம்பவம் பற்றி காவல்துறை தரப்பில் கூறியதாவது:

இந்தப் பகுதியில் கோகி என்ற ரவுடிக்கும் சுனில் என்கிற தில்லுவுக்கும் அதிகார போட்டி. அவன் கோஷ்டியை சேர்ந்த ஒருவன் கொல்லப் பட்டால், பதிலுக்கு இவன் கோஷ்டியை சேர்ந்த ஒருவன் கொல்லப்படுவது வழக்கம்.

இது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தில்லு தற்போது சிறையில் இருக்கிறான். தில்லுக்கும் கோகிக்குமான மோதல் பல வருடங்களுக்கு முன்பிருந்தே தொடர்கிறது.

2014-ம் ஆண்டு டெல்லி அலி பூர் கல்லூரியில் நடந்த தேர்தலில் இரண்டு பேரும் ஒவ்வொரு வேட்பாளருக்கு ஆதரவளிக்க அன்றிலிருந்து அதிகமானது இவர்களின் மோதல். இதுவரை இரண்டு தரப்பிலும் 14 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இன்னும் பலியாகக் காத்திருக்கிறது பல உயிர்கள்.

நேற்றைய மோதலில் சுட்டுக்கொல்லப்பட்ட முகுலின் மாமா தீபக் என்ற ராஜூ. கோகியின் உறவுப் பெண்ணுடன் தொடர்பில் இருந்தார். இதன் காரணமாக ஏற்பட்ட மோதலில் ராஜூவைத் தீர்த்துக்கட்டினான் கோகி.

இதற்குப் பழி வாங்க சபதம் எடுத்திருந்தான், முகுல். முகுலுக்கு வயது 16-தான்! இது கோகிக்குத் தெரியவந்தது. அவன் துப்பாக்கியைத் தூக்கும் முன், நாம் அவனைத் தீர்த்துவிடுவோம் என்று நினைத்தான் கோகி.

முகுலையும் அவனோடு இருக்கும் கூட்டத்தையும் கூண்டோடு காலி பண்ண முடிவு செய்து அதற்காகத் திட்டம் போட்டான். அவர்களின் நடமாட்டத்தை சில நாட்களாக கவனித்தான்.

தினமும் காலையில் உடற்பயிற்சி கூடாரத்திற்கு சென்று வருவதை அறிந்து அங்கேயே தீர்த்துகட்ட முடிவு செய்தான்.

கோகியின் திட்டம் முகுலும் தெரிய வந்ததால் எப்போதும் ஆட்களோடு பாதுகாப்பாகவே இருந்தான். இதற்காக புல்லட் புரூப் காரையும் பயன்படுத்தியுள்ளான்.

அதையும் மீறி நேற்றைய சம்பவத்தில் முகுலை போட்டுத்தள்ளிவிட்டான் கோகி.

ரவுடி கோகி மீது பல்வேறு கொலை வழக்குகள் உள்ளன. 2016-ம் ஆண்டு காவல்துறை பாதுகாப்பில் இருந்து தப்பிய கோகி இன்றுவரை தலைமறைவாகவே இருக்கிறான் என காவல்துறை தரப்பு கூறியுள்ளது.