ஔடத குறைப்பாடு ஏற்பட்டால் அதன் பொறுப்பை மருத்துவ அதிகாரி ஏற்க வேண்டும்

Tuesday, 19 June 2018 - 17:22

%E0%AE%94%E0%AE%9F%E0%AE%A4+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+
நாட்டில் அமைந்துள்ள எந்தவொரு மருத்துவமனையிலாவது ஔடத குறைப்பாடுகள் ஏற்பட்டால் அதன் பொறுப்பை மருத்துவ அதிகாரி ஏற்க வேண்டும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மொணராகலை மாவட்ட பொது மருத்துவமனைக்கான கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

ஔடத குறைப்பாடு ஏற்பட்டால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மென்பொருளை பயன்படுத்தி அருகில் உள்ள மருத்துவமனையில் குறித்த ஔடதங்களை பெற்றுக்கொள்ளுமாறு அமைச்சர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் , நாட்டின் எந்தவொரு மருத்துவமனையிலும் தற்போதைய நிலையில் ஔடத பற்றாக்குறை இல்லை என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.