திகாம்பரத்தின் அமைச்சிற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு கோரிக்கை

Tuesday, 19 June 2018 - 19:59

%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சிற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று, முன்னாள் அமைச்சரும், மகிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்தாநந்த அலுத்கமகே வலியுறுத்தியுள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாய்மொழி மூல கேள்வி நேரத்தின்போது அவர் இந்த விடயத்தை வலியுறுத்தினார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சினால், இந்தியாவின் உதவியுடன் பெருந்தோட்ட மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை எத்தனை என்று அவர் வினவினார்.

தாம் சஜித் பிரேமதாசவின் அமைச்சின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட விடுகளை பற்றிக் கேட்கவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தாநந்த அலுத்கமகே குறிப்பிட்டார்.

ஆனாலும் இவை அனைத்தும் தமது அமைச்சின் கீழ் மலையகத்தில் நிர்மாணிக்கப்பட்டவை என்று, ராஜாங்க அமைச்சர் லக்கி ஜெயவர்தன கூறினார்.

இதன்போது எழுந்த சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல, அண்மையில் தாம் லெவலண்ட் தோட்டத்துக்கு சென்றதாகவும், அங்கு அமைச்சர் திகாம்பரத்தினால் 100 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவை அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் நிர்மாணிக்கப்பட்டவை அல்ல என்றும் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், தொடர்ந்து விவாதித்த நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தாநந்த அலுத்கமகே, பெருந்தோட்டங்களில் ஏழு பேர்ச் காணியில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் அளவில் போதுமானவை இல்லை என்றும், உரியத் தரத்தைக் கொண்டிருப்பதில்லை என்றும் கூறினார்.

அத்துடன் அமைச்சு தோல்வி அடைந்துள்ளதாகவும், அமைச்சர் திகாம்பரத்தின் அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்றும் இது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அவரது விவாதத்துக்கு பதில் வழங்கிய கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், மகிந்தாநந்த அலுத்கமகே அமைச்சராக இருந்த போது, எத்தனைவீடுகளை கட்டினார் என்று கேள்வி எழுப்பினார்.