ஐசிசியின் தண்டனை / சந்திமாலின் அதிரடி தீர்மானம்!!

Thursday, 21 June 2018 - 13:30

%E0%AE%90%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88+%2F+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%21%21
இலங்கை - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது பந்தின் தன்மையை மாற்றியதாக குற்றம் சுமத்தப்பட்டு அபராதம் மற்றும் போட்டித்தடை விதிக்கப்பட்ட இலங்கை டெஸ்ட் அணித்தலைவர் தினேஷ் சந்திமால் அந்த தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்ய தீர்மானித்துள்ளார்.

இந்த குற்றத்திற்காக சந்திமாலுக்கு போட்டிக் கட்டணத்தில் 100 சதவீத அபராதமும் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கவும் ஐசிசி நடவடிக்கை எடுத்திருந்தது.

இதனை எதிர்த்தே சந்திமால் மேன்முறையீடு செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ள சிலவாரங்கள் தேவைப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக, சந்திமாலுக்கு மேற்கிந்திய தீவுகளுடன் இடம்பெறவுள்ள மூன்றாவது போட்டியில் பங்கேற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த விசாரணைகளுக்காக சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தால் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.