சூடுபிடிக்கும் பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்ட சிறார்கள் விவகாரம்

Thursday, 21 June 2018 - 21:06

%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
சட்டவிரோதகுடியேறிகளாக கருதப்படும் பெற்றோரிடம் இருந்து பிள்ளைகளை பிரிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் திட்டம் குறித்த விவாதம் அமெரிக்க காங்கிரஸுக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த சட்டத்தை நிறுத்தும் உத்தரவில் டொனால்ட் ட்ரம்ப் கைச்சாத்திட்டுள்ளார்.

இந்த சட்டத்துக்கு மக்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பு வெளியானதை அடுத்தே அவர் இதனை ரத்து செய்வதற்கு தீர்மானித்திருந்தார்.

எவ்வாறாயினும், இந்த சட்டத்தின் கீழ் ஏலவே பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்ட சிறார்களின் நிலை என்னவாகும் என்பது குறித்த அறிவிப்பு எவையும் இன்னும் வெளியாக்கப்படவில்லை.

கடந்த மே மாதம் 5ம் திகதி முதல் ஜுன் 9ம் திகதி வரையில் இரண்டாயிரத்து 206 பெற்றாரிடம் இருந்து 2 ஆயிரத்து 342 சிறார்கள் பிரிக்கப்பட்டு, தனித்தனியே தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.