விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படலாம்

Sunday, 24 June 2018 - 11:36

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D
மத்திய வங்கி முறி மோசடி விவகாரம் தொடர்பில், ஜனாதிபதி ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் சில தகவல்களை வெளியிட முடியாது என சட்டமா அதிபர் ஜனாதிபதியின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
 
இந்த தகவல்களை வெளியிடுவதன் மூலம் முறி மோசடி குறித்த விசாரணைகளிலும், சிவில் வழக்குகளிலும் பாதிப்புக்கள் ஏற்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இதேவேளை, கடந்த வாரத்தில் அரசியல் தளத்தில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வந்தன.
 
பணம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் அதில் இருப்பதாக வெளியான தகவல்களை அடுத்து இவ்வாறான விவாதங்கள் இடம்பெறுகின்றன.
 
இந்த அறிக்கையை வெளியிடுவதன் மூலம் விசாரணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என முன்னதாக சட்டமா அதிபர் தெரிவித்திருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
 
இந்த நிலையில், குறித்த தகவலை வெளியிடக்கூடாது என தற்போது சட்டமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.