'விருந்தக கண்காட்சி' 20ஆம் திகதி

Sunday, 24 June 2018 - 13:39

+%27%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%27++20%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF+
வெளிநாட்டவர்கள் உட்பட பலர் பங்கு கொள்ளும் 2018ஆம் ஆண்டிற்கான 'விருந்தக கண்காட்சி' எதிர்வரும் ஜூலை மாதம் 20ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
 
இலங்கை விருந்தக பாடசாலை பட்டதாரிகள் சங்கம் மற்றும் அரச தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
இந்த கண்காட்சி நிகழ்வில் மாலைதீவு, சீஷெல்ஸ், இந்தியா மற்றும் பல தெற்காசிய நாடுகளும் பங்கு கொள்கின்றன.
 
இது தவிர, சர்வதேச ரீதியாக பல நாடுகள் தமது விருந்தகங்கள் மற்றும் அத்துடன் தொடர்பு கொண்ட பல பொருட்களை கொண்ட காட்சியகங்கள் அமைக்கப்படவுள்ளன.
 
இந்த கண்காட்சி மூலம், விருந்தகம் தொடர்பாக நேரடியாகவும் மறைமுகமாகவும் தொழில் புரியும் பலர் தமது உற்பத்தி மற்றும் சேவை என்பனவற்றை வழங்க முடியும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
 
உலகளாவிய பிரபல சமையல் கலை நிபுணர்கள் பல விதமான புதுமையான உணவு வகைகளை தயாரிக்கும் முறை தொடர்பாக செய்முறை விளக்கத்துடன் வழங்கவுள்ளனர்.
 
இது தவிர, இலங்கை விருந்தகங்கள் மற்றும் மக்களின் விருந்தோம்பல் இயல்புகளை வெளிப்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சி தொடர்பான முன்னோடி தகவல்களை வழங்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கத்தோலிக்க விவகாரங்களுக்கான அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் தலைமையில் கடந்த வாரம் இடம்பெற்றது.